பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கோலாகலம்: போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டு!

திருவாரூர், ஜூலை 15

🔴👉திருவாரூர் மாவட்டம், பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு "கல்வி வளர்ச்சி நாள்" விழா இன்று (15.07.2026) மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது


இவ்விழாவிற்குப் பள்ளிப் பொறுப்புத் தலைமையாசிரியர் திரு.*மீனா. சாமிநாதன்  அவர்கள் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் திருமதி மு. மஞ்சுளா வரவேற்றுப் பேசினார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி.பா. சரஸ்வதி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் துணைத் தலைவர் திருமதி ச. சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.



தமிழக அரசின் "உங்கள் ஊரில் உங்களை தேடி" எனும் சிறப்புத் திட்டத்தின் கீழ், பள்ளியைப் பார்வையிட வந்திருந்த    திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் . பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மனமார்ந்த மரியாதை செலுத்தி விழாவினைத் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் பெருந்தலைவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


🟢👉 இந்த விழாவில், பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்களான திரு. மு. நாகநாதன், திருமதி ச. கௌரிமீரா, மற்றும் திருமதி பா. கிருத்திகா ஆகியோர் சிறப்புரையாற்றினர். அவர்கள் தங்களது உரையில், காமராஜரின் எளிமையான வாழ்க்கை வரலாறு, அவரது வாழ்வின் சுவாரஸ்யமான நிகழ்வுகள் மற்றும் தமிழகக் கல்வி வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். 

மேலும், பெருந்தலைவரின் தூய்மையான வாழ்வியல் நெறிகளை மாணவர்கள் எவ்வாறு தங்கள் வாழ்வில் கற்றுக்கொண்டு, அதன்படியே நல்வழியில் நடக்க வேண்டும் என்பதைப் பற்றி தெளிவாக விளக்கினர்.
 





இவ்விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் பேச்சுப்போட்டி ஆகிய முத்தமிழ் போட்டிகள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற , மாணவர்களுக்கு விழாவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. மாணவர்களுக்கான இப்போட்டிகளை பட்டதாரி ஆசிரியர்கள் திருமதி மு. கனிமொழி, செல்வி செ.கீர்த்தனா, மற்றும் செல்வி நா. தீபா ஆகியோர் முன்னின்று ஒருங்கிணைத்தனர்.


இவ்விழாவிற்கான முழு ஏற்பாடுகளையும் பகுதிநேர ஆசிரியர்கள் திரு. த.ஜெயராமன், திரு. ப. கண்ணன் ஆகியோர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். உடற்கல்வி ஆசிரியர் திரு. கொ. செந்தில் அவர்கள் விழாவின் நிறைவாக அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்.





Comments

Popular posts from this blog

பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு (SMC) மறு கட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் - 100 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்பு

பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு ஆய்வு: கல்வி அலுவலர்கள் பாராட்டு!

பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி: மாணவர்கள் ஆர்வம்!