பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு (SMC) மறு கட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் - 100 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்பு

தலைப்பு: பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு (SMC) மறு கட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது!

இடம்: பழையவளம், திருவாரூர் மாவட்டம் நாள்: ஆகஸ்ட் 29, 2026

திருவாரூர் மாவட்டம், பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு (SMC) மறு கட்டமைப்பு (2026-2028) விழிப்புணர்வு கூட்டமானது பெரும் வரவேற்புக்கு மத்தியில் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.




இக்கூட்டத்திற்குப் பள்ளியின் தலைமையாசிரியர் மீனா சாமிநாதன் அவர்கள் தலைமை தாங்கி, கூட்டத்தை ஒருங்கிணைத்துத் துவக்கி வைத்தார். தமிழ் ஆசிரியர் மு. மஞ்சுளா அவர்கள் வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற சிறப்புரையில், பட்டதாரி ஆசிரியர்களான மு. நாகநாதன் மற்றும் சௌ. கௌரிமீரா ஆகியோர் கடந்த ஆண்டுகளில் பள்ளி மேலாண்மை குழுவின் சிறப்பான செயல்பாடுகள் குறித்தும், புரவலர்களைத் தேடிப் பள்ளிக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுத் தந்தது குறித்தும் விளக்கிப் பேசினர். மேலும், பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் பள்ளியில் ஏற்பட்ட பல்வேறு மேம்பட்ட வளர்ச்சிகள் மற்றும் சாதனைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து, பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பிற்காக மொத்தம் 24 உறுப்பினர்கள் தேவைப்படுவதாகவும், அந்த 24 உறுப்பினர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறித்த வழிமுறைகளையும் தலைமையாசிரியர் விளக்கினார். குறிப்பாக, வரும் அக்டோபர் 10-ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் நாளில் பெற்றோர்கள் அனைவரும் பெருமளவில் கலந்துகொண்டு, நல்லதொரு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துட ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.



கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சிக்குத் தேவையான எதிர்காலத் திட்டங்கள் குறித்தும், ஏற்கனவே திட்டமிட்டு வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான பாராட்டுக்களும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. 

கடந்த காலங்களில் சிறப்பாகச் செயல்பட்ட பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத் தலைவர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் சேவைகளுக்குப் பாராட்டுக்களும் நன்றியும் தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.

பள்ளி மேலாண்மை குழு தலைவர் பா. சரஸ்வதி மற்றும் பள்ளி மேலாண் குழு துணை தலைவர் ச.சரண்யாஆகியோர் பள்ளி மேலாண்மை குழுவில் எங்களுடைய பங்களிப்பு எனும் தலைப்பில் உரையாற்றினர்.

நிகழ்வின் இறுதியாக, பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்த இக்கூட்டம், பள்ளியின் மேன்மேலும் வளர்ச்சிக்குத் திட்டமிடப்பட்ட நிகழ்வாகவும், உறுதுணையாக அமையும் வகையிலும் வெற்றிகரமாக நிறைவுபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் நிகழ்வின் நோக்கத்தையும் எதிர்காலத் திட்டங்களையும் தெளிவாக விளக்கி நன்றி கூறினார்.

சிறப்பாக நடைபெற்ற கூட்டத்தினை பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர்கள் செ.கீர்த்தனா நா.தீபா,மு.கனிமொழி   ஆகியோர் ஒருங்கிணைத்து  செயல்பட்டனர்.











Comments

Popular posts from this blog

பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு ஆய்வு: கல்வி அலுவலர்கள் பாராட்டு!

பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி: மாணவர்கள் ஆர்வம்!