திருவாரூர் மாவட்ட பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மாநில அளவிலான பாராட்டு சான்றிதழ்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்
திருவாரூர் மாவட்ட பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மாநில அளவிலான பாராட்டு சான்றிதழ்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார் திருச்சிராப்பள்ளி: 07.09.2025 தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், 2024-2025 ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்குப் பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. இவ்விழாவில், திருவாரூர் மாவட்டம், பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்ததற்காகப் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. மீனா சாமிநாதன் அவர்களிடம் பாராட்டுச் சான்றிதழை வழங்கிச் சிறப்பித்தார். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வி இயக்குநர், இணை இயக்குநர்கள் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி: இந்தச் சாதனை குறித்துப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கூறுகையில், "இது எங்கள் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுடைய கடின உழைப்பிற்கும், மாணவர்களின...