பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளி – பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி – ஆசிரியர்களுக்கு பாராட்டு
பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளி – பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி – ஆசிரியர்களுக்கு பாராட்டு
திருவாரூர் மாவட்டம் பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2024-25 கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றதற்காக, ஆசிரியர்கள் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களால் பாராட்டப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, நினைவுப்பரிசுகள் மற்றும் பாராட்டு சால்வைகள் அணிவிக்கப்பட்டது. பள்ளியின் சிறப்பான கல்விச் சாதனையை பாராட்டிய பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர், மாணவர்கள் வெற்றிக்கு உழைத்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பை வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களுடன், பெற்றோர்கள், மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, ஆசிரியர்களின் சாதனையை சிறப்பித்தனர்.

Comments
Post a Comment