10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்குத்தொகை வழங்கி பாராட்டு
திருவாரூர் மாவட்டம் பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா – சிறந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது
திருவாரூர் மாவட்டம், பழையவளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி மீனா.சாமிநாதன் அவர்கள் தலைமை வகித்தார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
- புரவலர் அ.ஸ்ரீதர் அவர்கள் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு ரூ.5000/-, ரூ.3000/-, ரூ.2000/- (மூன்று மாணவர்களுக்கு) வழங்கினார்.
- மேலும், திருச்சி கோவிந்தராஜன் அறக்கட்டளை சார்பாக முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு ரூ.5000/-, ரூ.3500/-, ரூ.1500/- ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
பரிசு பெற்ற மாணவர்கள்:
🔹 முதலிடம் – இ. அகல்யா – 456/500
🔹 இரண்டாம் இடம் – அ. அனுஸ்ரீ – 455/500
🔹 மூன்றாம் இடம் – வி. மாதேஸ்வரி, த. செமிலா, ஜோ. ஜெனிஸ்ராஜா – 442/500
இந்த நிகழ்விற்கு பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தமிழாசிரியர் மு. மஞ்சுளா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். ஆங்கில ஆசிரியர் பா. கிருத்திகா தொகுப்புரை வழங்கினார். கணித ஆசிரியர் ச. கௌரிமீரா நன்றியுரை நிகழ்த்தினார். விழா ஏற்பாட்டினை சமூக அறிவியல் ஆசிரியர் மு. நாகநாதன் மற்றும் கணினி ஆசிரியர் த. ஜெயராமன் செய்தனர்.
பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு துணை நிற்கும் நல்லுள்ளங்களுக்கு பள்ளி சார்பில் நன்றியுரை தெரிவிக்கப்பட்டது.









Comments
Post a Comment