பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2024-25 ஆம் கல்வியாண்டு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2024-25 ஆம் கல்வியாண்டு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி சிறகுகள் அறக்கட்டளை சார்பில் பரிசுத்தொகை, ஊக்க பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.




இந்நிகழ்வில் 100% தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கும்  பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.


பத்தாம் வகுப்பு பொது தேர்வு முதலிடம் பெற்ற இ.அகல்யா (456/500) என்ற மாணவிக்கு ரூ-5000 /- , இரண்டாம் இடம் பெற்ற அ.அனுஸ்ரீ என்ற மாணவிக்கு  ரூபாய் 2500/- மூன்றாம் இடம் பெற்ற 442 / 500 வி.மாதேஸ்வரி, த.செமிலா, ஜோ.ஜெபஸ் ராஜா ஆகியோருக்கு   ரூபாய் 1000/- ஊக்கத் தொகையும்,   கேடயமும், சான்றிதழ்களும் வழங்கி கல்வி சிறகுகள்  அறக்கட்டளை சார்பில் சிறப்பித்தார்கள்.






இறுதியாக பள்ளி 100% தேர்ச்சி அடைந்ததை பாராட்டும் விதமாக பள்ளிக்கு கேடயம் வழங்கி சிறப்பித்தார்கள்.


இந்நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 

Comments

Popular posts from this blog

பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு (SMC) மறு கட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் - 100 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்பு

பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு ஆய்வு: கல்வி அலுவலர்கள் பாராட்டு!

பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி: மாணவர்கள் ஆர்வம்!